இங்கு தாங்க முடியாத கழுத்து வலியைப் போக்கும் அற்புத சிகிச்சை குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்டியோகாண்ட்ரிடிஸ் என்னும் பிரச்சனையால் கழுத்து மற்றும் முதுகெலும்புப் பகுதியில் தாங்க முடியாத கடுமையான வலியை சந்திக்கக்கூடும். இந்த பிரச்சனை உள்ளவர்களால் மற்றவர்களைப் போல் சாதாரண வாழ்க்கையை வாழ்வது என்பது கடினமாக இருக்கும். ஆனால் சரியான சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை நிவாரணியின் மூலம், கழுத்து மற்றும் முதுகெலும்புப் பகுதியில் வலி ஏற்படுவதை பல வருடங்களுக்கு தள்ளிப் போடலாம். அந்த இயற்கை வழி என்னவென்று தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

தேவையான பொருட்கள்:

உப்பு – 10 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் ஆயில் – 20 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை:

இந்த இரண்டு பொருட்களையும் ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு பல நாட்கள் ஊற வைக்க வேண்டும். எப்போது கலவையில் உள்ள உப்பு ஓரளவு கரைந்து காணப்படுகிறதோ, அப்போது அது பயன்படுத்த தயாராக உள்ளது என்று அர்த்தம்.

பயன்படுத்தும் முறை #1

கலவை தயாரான பின்பு, வலியுள்ள கழுத்துப் பகுதியில் அந்த எண்ணெயைத் தடவி முதலில் 2-3 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் சில நொடிகள் கழித்து, மீண்டும் 2-3 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படியே 20 நிமிடத்தை எட்டும் வரை மசாஜ் செய்ய வேண்டும்.

பயன்படுத்தும் முறை #2

பிறகு ஈரமான துணியால் மசாஜ் செய்த பகுதியில் உள்ள அதிகப்படியான எண்ணெயைத் துடைத்து எடுக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை #3

இப்படி செய்யும் போது, சற்று எரிச்சலாகத் தான் இருக்கும். ஆனால் பேபி பவுடரை அப்பகுதியில் தடவினால் எரிச்சல் தணியும்.

எவ்வளவு காலம் செய்ய வேண்டும்?

இந்த சிகிச்சையை 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், இதுவரை அனுபவித்த வலியில் இருந்து உடனடி மாற்றத்தைக் காணலாம்.