சீரகத்தில் புரோட்டீன், விட்டமின் A, C, D, B6, B12, கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், இது போன்ற ஆரோக்கியமான சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

சீரகம் என்ற அதன் பெயரிலேயே ஜீரணத்தை உணர்த்துகிறது. இதனால் இந்த சீரகத்தை தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைத்துக் குடித்து வந்தால், ஏராளமான நன்மைகளை நாம் பெறலாம்.
சீரக நீரைக் குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த சில வாரங்களிலேயே தாய்ப்பால் சுரப்பது குறைந்தால், அவர்கள் தொடர்ச்சியாக சீரகநீரை குடித்து வர வேண்டும். இதனால் பால் சுரப்பு அதிகமாகும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் சீரக நீரைக் குடித்து வந்தால், நமது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

குளிர்காலங்களில் நமக்கு ஏற்படும் சுவாசப்பாதை மற்றும் நுரையீரலில் உண்டாகும் தொற்றை எதிர்த்து போராடி, சுவாசத்தை சீராக்குகிறது.

நமது உடம்பில் கல்லீரலில் படியும் அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

மாதவிடாயின் போது, பெண்களுக்கு ஏற்படும் வலி மற்றும் கர்ப்ப காலத்தின் போது உண்டாகும் ஃபால்ஸ் வலியை இந்த சீரகநீர் குணப்படுத்துகிறது.

சீரகத்தில் இருக்கும் விட்டமின் சத்துக்கள் நமது உடம்பில் உள்ள செல்லின் இறப்புகள், நரை முடி, சுருக்கமான சருமம் ஆகியவற்றை தடுத்து, என்றும் இளமையாக பாதுகாக்கிறது.